ஐரோப்பாவின் 9 நாடுகளில் போராட்டம்!

Estimated read time 0 min read

பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், அல்பேனியா, ஆஸ்திரியா, ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்பாவின் முக்கிய 9 நாடுகளில் ஒரே காலகட்டத்தில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், அல்பேனியா, ஆஸ்திரியா, ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்பாவின் முக்கிய 9 நாடுகளில் ஒரே காலகட்டத்தில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. பிரான்ஸில் பள்ளியாசிரியர்கள் பற்றாக்குறை, எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது.

இதேபோல் விலைவாசி, போதிய ஊதியமின்மை, சீர்குலைந்த பொதுச் சேவைத் துறைகளால் இத்தாலியில் வெடித்த போராட்டம் வன்முறையாக மாறியது.

பெல்ஜியத்தில் கல்விக் கட்டணங்கள் அதிகரிப்பால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில், வீட்டு வாடகைக் கட்டணங்களுக்காகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. ஜெர்மனியில் இராணுவ சேவைத் திட்டங்களுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அல்பேனியாவில் ஊழல் மற்றும் வேலையின்மைக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது.

ஆஸ்திரியாவில் பல்கலை நிதியை அரசு குறைப்பதாக அறிவித்ததற்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author