அதிர்ச்சியில் அறிவாலயக் கோட்டை.. திமுக கூட்டணியில் அடுத்தடுத்து விரிசல்.? காங்கிரஸ் போடும் மாஸ்டர் பிளான்.! பின்னணியில் இருக்கும் சீக்ரெட் டீல்..!! 

Estimated read time 1 min read

“திமுக கூட்டணியில் அடுத்தடுத்து விரிசல்.! தவெக-வை நோக்கிப் பாயும் தோழமைக் கட்சிகள்.. ‘ தமிழக அரசியல் களம் இப்போ வேற லெவலில் சூடாகி, அறிவாலயம் வட்டாரத்தையே ஆட்டிப் படைக்கும் அளவுக்கு ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது!

“மதிமுக எந்தக் கூட்டணியில் தொடர்வது என்பது குறித்துப் பேச ஜூன் 27-ஆம் தேதி அவசர நிர்வாகக் குழுவைக் கூட்டியுள்ளோம்; அதில் நிர்வாகிகள் கூறும் கருத்துகளின் அடிப்படையில்தான் இறுதி முடிவு” என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஓப்பனாக ஸ்டேட்மென்ட் விட்டு கூட்டணிப் பஞ்சாயத்தைக் கொளுத்திப் போட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகிய கட்சிகள் ஏற்கனவே விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசுக்குத் தங்களின் ஆதரவை ரகசியமாகவும் பகிரங்கமாகவும் கொடுத்து வரும் நிலையில், இப்போ மதிமுகவும் தவெக-வை நோக்கி நெருங்கத் தொடங்கியிருப்பது திமுக-விற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபடி மேலே போய், “திமுகவா, இல்லை தவெக-வா?” என்று ஒரு கை பார்த்துவிட ஜூன் 20-ல் முஸ்லிம் லீக் தனது முக்கியப் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டவுள்ளது.

இதற்கெல்லாம் மகுடம் வைப்பது போல், தேசிய அரசியலில் இண்டியா (INDIA) கூட்டணியில் திமுகவுக்குப் பதிலாக தவெக-வைச் சேர்க்க காங்கிரஸ் கட்சி புது கணக்கு போட்டு காய்களை நகர்த்தி வருவதாக வெளியாகும் தகவல்கள், “திமுக தமிழ்நாட்டில் முற்றிலும் தனித்து விடப்படுகிறதா?” என்ற கேள்வியோடு கோட்டை வரை அரசியல் அதிர்வலைகளை அனல் பறக்க வச்சிருக்கு…

Please follow and like us:

You May Also Like

More From Author