இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

Estimated read time 0 min read

இந்தியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் அமெரிக்கா உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசுவதற்கு முன்பாக அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, உலகளாவிய எரிபொருள் விநியோகம் மற்றும் விலையை கருத்தில் கொண்டே ரஷ்ய எரிசக்தி மீதான பொருளாதார தடைகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளதாக கூறினார்.

முக்கியமான பொருட்கள் மற்றும் வளங்களுக்கு குறிப்பிட்ட நாட்டையோ அல்லது பிராந்தியத்தையோ மட்டும் 100 சதவீதம் நம்பியிருப்பது பாதுகாப்பானது அல்ல என குறிப்பிட்ட அவர், விநியோகச் சங்கிலியை பரவலாக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author