தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

Estimated read time 0 min read

விஜயதசமியை பண்டிகையொட்டி தினமலர் நடத்திய அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்விப் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.

விஜயதசமியையொட்டி தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில், நான்கு வயது குழந்தைகளுக்கான ‘அ’னா.. ‘ஆ’வன்னா… அரிச்சுவடி ஆரம்பம் என்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின், ‘சேனல் பார்ட்னர்’ ஆக ‘தமிழ் ஜனம்’ செய்தி தொலைக்காட்சி இணைந்துள்ளது. சென்னை தாம்பரம் ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

‘இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். ஆன்மிகம், எழுத்து, அறிவியல், மருத்துவ துறைகளில் சாதனை படைத்த ஆளுமைகள் பங்கேற்ற நிலையில், அவர்களது மடியில் குழந்தைகளை அமரவைத்து நெல்மணிகளில் அ என்ற எழுத்தை எழுதி கல்வி தொடங்கி வைக்கப்பட்டது.

விஜயதசமி நாளில் குழந்தைகளின் கல்வியை சிறப்புமாக தொடங்கி வைத்த தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழுக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author