தமிழத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: 22 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை  

Estimated read time 0 min read

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், வளிமண்டலச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஜூன் 1 அன்று தமிழகத்தின் 10 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டினாலும், அடுத்த சில தினங்களுக்குப் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கேரளப் பகுதிகளில் அடுத்த ஓரிரு தினங்களில் தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் துவங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தற்போது தெற்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை ஒரு வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது.

You May Also Like

More From Author