அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா: தேசிய தலைவர் நிதினிடம் கடிதம் ஒப்படைப்பு  

Estimated read time 1 min read

தமிழக அரசியலில் மிக முக்கியத் திருப்புமுனையாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகுவதாகத் தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் சமர்ப்பித்துள்ளார்.
டெல்லியில் இன்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்த அண்ணாமலை, தனது விலகல் கடிதத்தை முறைப்படி ஒப்படைத்ததாக News18 செய்தி வெளியிட்டுள்ளது.
பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்த அண்ணாமலை, சுமுகமான முறையில் கட்சியிலிருந்து விலக விரும்புவதாகத் தெரிவித்தார்.
“தனது அரசியல் பாதையை இனி சுயாதீனமாக தீர்மானிக்க விரும்புவதாக” அவர் மேலிடத்திடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author