சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 17ஆம் நாள் மாலை, ஷாங்ஹாய் மாநகரில், 2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் செயற்கை நுண்ணறிவு ஆட்சிமுறை பற்றிய உலகளாவிய உயர் நிலை கூட்டத்திலும் கலந்துகொண்ட ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸைச் சந்தித்துரையாடினார்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில்,
ஐ.நா தலைமை செயலாளராக பதவி ஏற்ற 10 ஆண்டுகளில் திரு குட்ரேஸ் ஐ.நாவுக்குத் தலைமை தாங்கி, பலதரப்புவாதத்தைப் பேணிக்காத்து, கால நிலை மாற்றம் உள்ளிட்ட உலக அறைகூவல்களைச் சமாளித்து, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய துறைகளுக்கான உலக ஆட்சிமுறையை முன்னேற்றி, ஐ.நா சீர்திருத்தத்தைத் துவங்கினார். இவற்றிற்கு சீனா பாராட்டு தெரிவிக்கின்றது. தற்போது சர்வதேச நிலைமையில் மாற்றங்கள் மற்றும் குழப்பங்கள் அதிகரித்துள்ள நிலையில், உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்தி, ஐ.நாவின் தகுநிலையையும் பயனையும் வலுப்படுத்த வேண்டும் என்றும் நேர்மை, புத்தாக்கம், பொறுப்பு ஏற்பது ஆகியவற்றில் ஊன்றி நிற்க வேண்டும் என்றும் கூறினார்.
