தாய்லாந்து தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் ஷாங்காயில் சந்திப்பு

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 17ஆம் நாள் மாலை ஷாங்காய் மாநகரில் 2026ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆட்சிமுறை பற்றிய உலகளாவிய உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்று சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து தலைமை அமைச்சர் அனுடினைச் சந்தித்துரையாடினார்.

அப்போது ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், சீன-தாய்லாந்து நட்பு ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்துள்ளது. இரு நாட்டுறவை சீனாவின் அண்டை தூதாண்மையுறவின் முக்கிய இடத்தில் சீனா வைத்துள்ளது. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று நெடுநோக்கு ரீதியிலான நம்பிக்கையையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்த வேண்டும். மேலும் நிதானம், செழுமை மற்றும் தொடரவல்ல சீன-தாய்லாந்து பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும். இரு நாடுகளும் தத்தமது நவீனமயமாக்க முன்னேற்ற போக்கிற்கு ஆதரவளித்து பிரதேசத்தின் நிதானம் மற்றும் செழுமை வளர்ச்சியை முன்னேற்றுவதற்குப் பங்காற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author