அதிமுக- பாஜக கூட்டணிக்குள் தேமுதிக வர வேண்டும் என்று எனது கோரிக்கையாக வைக்கிறேன். நாம் அனைவரும் இணைந்து தான் திமுக அரசை தோற்கடிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் தமாகா நிறுவனருமான ஜிகே முப்பனாரின் 24-வது நினைவு தினம் கடைபிடிக்கபட்டது,
இதில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல் கே சதீஷ் உள்ளிட்டோர் மலர் மரியாதை செலுத்தினர்.
மூப்பனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “தமிழக முதல்வர் முதலீடு இருப்பதற்காக வெளிநாடு செல்வதாக கூறுகிறார். ஆனால் முதலீடுகளை ஈர்ப்பது பிரதமர் மோடி தான். பாரதப் பிரதமர் உலக அளவில் நமது பாரதத்தை உயர்த்தி உள்ளதால் தான் தமிழ்நாட்டிற்கும் முதலீடு கிடைக்கிறது.
ஒரு மாநிலத்தின் முதல்வரே வெளிநாடு செல்லும் அவசியம் இருக்கும் போது பிரதமர் வெளிநாடு செல்வதற்கு அவசியம் இருக்காதா? மேலும் எல்லா உயர்வுக்கும் பிரதமர் தான் காரணம் என தமிழக முதல்வர் அறிய வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து தற்போது உள்ள திமுக அரசை தோற்கடிக்க வேண்டும்.
மூப்பனார் பிரதமர் ஆவதை பலர் தடுத்தனர். அப்துல்காலம் பிரதமர் ஆவதை தடுத்தார்கள், தற்போது சிபி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராக வருவதை திமுக விரும்பவில்லை. தமிழருக்கு திமுக ஆதரவு அளிக்காததில் இருந்தே இவர்களது பொய் முகம் கிழிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பாஜக கூட்டணிக்குள் தேமுதிக வர வேண்டும் என்று எனது கோரிக்கையாக வைக்கிறேன். நாம் அனைவரும் இணைந்து தான் திமுக அரசை தோற்கடிக்க வேண்டும். ரசிகர்களை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன் என்றார் நடிகர் அஜித்குமார். ஆனால், ரசிகர்களை தொண்டர்களாக்கி, பவுன்சர்களை வைத்து தூக்கியெறிகிறார் விஜய். விஜய்யால் வெற்றியின் பக்கம் வரமுடியாது, அதை ஒவ்வொரு மாநாட்டிலும் நிரூபிக்கிறார்” என விமர்சித்தார்.