ஒரே வாரத்தில் 964 மில்லியன் டாலர் உயர்ந்த அந்நியச் செலாவணி கையிருப்பு! ஆர்பிஐ தகவல்  

Estimated read time 0 min read

இந்தியப் பொருளாதாரத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நடப்பு ஜூலை 10 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மேலும் 964 மில்லியன் டாலர் உயர்ந்து, ஒட்டுமொத்தமாக 675.15 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது
வாராந்திர அடிப்படையில் கணக்கிடப்பட்ட இந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஜூலை 17) வெளியிட்டுள்ளது.
இதற்கு முந்தைய ஜூலை 3 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் நாட்டின் கையிருப்பு 7.26 பில்லியன் டாலர் என்ற அளவில் வளர்ச்சியைப் பெற்று 674.193 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author