சீன அரசுத் தலைவர்-கம்போடிய தலைமை அமைச்சர் சந்திப்பு

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜுலை 17ஆம் நாள் மாலை, ஷாங்ஹாய் மாநகரில், 2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் செயற்கை நுண்ணறிவு ஆட்சிமுறை பற்றிய உலகளாவிய உயர் நிலை கூட்டத்திலும் கலந்துகொண்டு சீனாவில் பணி பயணம் மேற்கொண்டுள்ள கம்போடிய தலைமை அமைச்சர் ஹுங் மனெடைச் சந்தித்துரையாடினார்.

அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில்,

சீனாவும் கம்போடியாவும் மனம் ஒருமித்து ஒன்றுக்கு ஒன்று ஆதரவு அளித்து வருகின்றன. நீண்டகாலத்தில் இரு நாட்டு நட்புறவு மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்தலைமுறை தலைவர்கள் உருவாக்கிய உறுதியான நட்புறவைத் இருதரப்பும் தொடர்ந்து, நெடுநோக்கு நம்பிக்கையை வலுப்படுத்தி, ஒத்துழைப்பு மேற்கொண்டு, புதிய யுகத்தில் அனைத்து காலங்களிலும் சீன-கம்போடிய பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைப்பதை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author