இமயமலையில் வெடிக்கப் போகும் இரட்டை ஆபத்து..! “200 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம்”… விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!! 

Estimated read time 1 min read

இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 ஆசிய நாடுகளில் பரந்து விரிந்து, சுமார் 200 கோடி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ‘இந்து குஷ் இமயமலை’ பிராந்தியத்தில், இந்த ஆண்டு ஒட்டுமொத்த பருவமழை வழக்கத்தை விடக் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உலகளாவிய புவி வெப்பமயமாதல் காரணமாக இப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாகப் பதிவாக வாய்ப்புள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது ஆசியப் பகுதியின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் சமநிலையையும், நதி நீர் ஆதாரங்களையும் பெருமளவில் பாதிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மழைப்பொழிவு குறைவாக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட போதிலும், அங்கு வறட்சி மற்றும் திடீர் வெள்ளம் ஆகிய இருவேறு ஆபத்துகள் ஒரே நேரத்தில் ஏற்படும் என்று ‘இசிமோlkட்’ பருவநிலை அமைப்பின் விஞ்ஞானிகள் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவினாலும், திடீரெனக் குறுகிய காலத்தில் கொட்டித் தீர்க்கும் அதிபயங்கர மழையால் கடுமையான நிலச்சரிவுகளும், திடீர் பெருவெள்ளமும் ஏற்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விந்தையான இயற்கை சீற்றங்களால் விவசாயத் துறையும், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்பதால், சம்பந்தப்பட்ட நாடுகள் இப்போதிருந்தே மிகுந்த விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author