உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் போர்க்கால தடைகளை நீக்க, ஈரான் ஒரு புதிய வியூகத்தை முன்வைத்துள்ளது.
அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, ஓமன் நாட்டு கடல் எல்லை வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதிப்பது குறித்து ஈரான் ஆலோசித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த பல வாரங்களாக பாரசீக வளைகுடாவில் நிலவி வரும் ராணுவப் பதற்றங்களைத் தணிக்கும் ஒரு முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் ஓமன் கடல் வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் பரிந்துரை?
