போஆவ் மன்றத்தில் சீன பசுமை வளர்ச்சி அனுபவம் பற்றி விவாதம்

Estimated read time 0 min read

போஆவ் ஆசிய மன்றத்தின் பெர்த் கூட்டம் 27ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் பெர்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பலர் கூறுகையில், சீனாவின் பசுமை வளர்ச்சிச் சாதனைகள் மக்களின் கவனத்தை ஈர்த்து, உலகின் பசுமை மாற்றத்துக்கும் தொடரவல்ல வளர்ச்சிக்கும் அரிய அனுபவங்களை வழங்கியுள்ளன என்று தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவின் காலநிலை எரியாற்றல் மற்றும் நிதிச் சிந்தனைக் கிடங்கின் நிறுவனரும் இயக்குநருமான டிம் பக்லி கூறுகையில், மின்கலன்கள், காற்று ஆற்றல் மின்சாரம், ஒலிவோல்ட்டா மின்கலன்கள் முதலிய துறைகளில் சீனாவின் செயல்பாடு மிக சிறப்பாக உள்ளது என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவின் ஃபோர்டெஸ்க்யூ குழுமத்தின் செயல் தலைமை இயக்குநர் ஆண்ட்ரூ ஃபாரஸ் கூறுகையில், சுரங்கம், இரும்புருக்கு, சிமெண்ட் முதலிய துறைகளின் பசுமை மாற்றத்தில், ஆஸ்திரேலியாவும் சீனாவும் ஒத்துழைப்பு மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author