கடல் நீரில் கரையும் நச்சுத்தன்மையற்ற பிளாஸ்டிக்கை கண்டுபிடித்த ஜப்பான் விஞ்ஞானிகள்  

Estimated read time 0 min read

கடல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.
அதாவது, தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் எச்சங்களை விட்டுவிடாமல் கடல் நீரில் பாதுகாப்பாக கரையும் ஒரு புதிய பிளாஸ்டிக் பொருளை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.
ரிகேன் எமர்ஜென்ட் மேட்டர் சயின்ஸ் மையம் மற்றும் டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த புதிய பிளாஸ்டிக், உப்புநீரில் வெளிப்படும் போது நச்சுத்தன்மையற்ற சேர்மங்களாக உடைக்கப்படும் அதே வேளையில், வழக்கமான பெட்ரோலியம் சார்ந்த பிளாஸ்டிக்கைப் போலவே நீடித்து உழைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தை வழிநடத்தி விஞ்ஞானி டகுசோ ஐடாவின் பல தசாப்த கால ஆராய்ச்சியிலிருந்து இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாகி உள்ளது.

You May Also Like

More From Author