இந்து விரோத ஆட்சி மாறவில்லை”- நயினார் நாகேந்திரன்

Estimated read time 1 min read

முதல்வர் நாற்காலி தான் மாறியுள்ளதே தவிர, இந்து விரோத ஆட்சி மாறவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற ஆணையிட்ட இரு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக திரு. ஜோசப் விஜய் அரசு தெரிவித்துள்ளது, அதன் இந்து விரோத முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. தமிழர் பண்பாட்டு உரிமையான தீபமேற்றுதலை முந்தைய இந்து விரோத திமுக அரசு தடுத்த நிலையில், அதே சதிச் சுவடுகளைத் தானும் பின்பற்றி மக்களின் உரிமைகளைப் பறிப்பது தான் முதல்வர் திரு. விஜய் அவர்களின் மாற்று சக்தியா? இதுதான் அனைவருக்குமான அரசா?

ஒன்று நிச்சயம்! அதிகார மமதையில், மக்களின் மதஉரிமைகளை முடக்கிப்போட எத்தனை ஆட்சியாளர்கள் மேல்முறையீடு செய்தாலும், தர்மம் ஒருபோதும் தோற்காது என்ற உறுதியான நம்பிக்கை தமிழக மக்களுக்கு உள்ளது. எங்கு சென்றாலும் நீதி வெல்லும்! தமிழர் பண்பாட்டு உரிமை காக்கப்படும்! திருப்பரங்குன்ற தீபத்தூண் நிச்சயம் ஒளிரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author