தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடலோர கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல சுழற்சி காரணமாக, அரபிக்கடல், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் தமிழகத்தின் சில பகுதிகள் உட்பட வங்கக்கடல் பகுதிகளிலும் பருவமழை தீவிரமாக முன்னேறியுள்ளது.
தமிழகத்தில் நேற்றைய தினம் குமரி, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 165 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மழை வரபோகுதே! சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
