அமோனியா வாயு கசிவு விவகாரம் VAO கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் செயல்பட்டு வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில் 74 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 67 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 5 பேர் உயிரழந்த நிலையில் மேலும் இரு பெண் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம் VAO கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆலை உரிமையாளர், மேலாளர் உட்பட 3 பேர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமோனியா கேஸ் டேங்கில் இருந்து செல்லும் பைப்பை முறையாக பராமரிக்கவில்லை. வாயு கசிவுக்கு பராமரிப்பு குறைபாடே காரணம் என்றும் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
