உத்தரப் பிரதேசம் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 12 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஒரு செல்லப்பிராணி கடையும், மேல் தளங்களில் அனிமேஷன் பயிற்சி மையமும் இயங்கி வந்தன.
மதியம் 3 மணியளவில் ஏசி டக்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நச்சுப் புகை வேகமாகப் பரவியதால், கட்டிடத்தின் உள்ளே இருந்த 20 முதல் 24 வயதுடைய மாணவர்கள் வெளியேற முடியாமல் கழிவறைகளிலும், பின் பக்கப் பகுதியிலும் தஞ்சமடைந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
லக்னோ அனிமேஷன் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து; 15 மாணவர்கள் பலி
