116 நாடுகளை பாதித்துள்ள குரங்கம்மை என அழைக்கப்படும் Mpox நோய் பரவல் குறித்து விவாதிக்க உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு அதை கடுமையான தரம் 3 அவசரநிலை என வகைப்படுத்தியது. இது உடனடி மற்றும் அவசர கவனம் தேவை என்பதைக் குறிக்கிறது.
2022இல் இந்த நோய் பரவல் தொடங்கியதிலிருந்து, தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
இது மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் பாதிப்புகள் தோன்றி வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, 2022ஆம் ஆண்டில், முதல் உறுதிப்படுத்தப்பட்ட Mpox பாதிப்பு கேரளாவில் 35 வயது நபர் ஒருவரிடம் கண்டறியப்பட்டது.