கத்தாரின் ராஸ் லஃப்பான் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியர்கள் என்று தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதில் மூவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சோகம்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் தற்பொழுது ஆபத்தான கட்டத்தை தாண்டி, நிலையான உடல்நலத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் எரிசக்தி துறை அமைச்சர் சாத் அல்-காபி செய்தியாளர்களிடம் பேசுகையில், உயிரிழந்தவர்கள் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தியதோடு, அவர்களது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.
கத்தார் LNG ஆலை வெடிவிபத்து: 12 இந்தியர்கள் பலி என தூதரகம் தகவல்
