2026 சீன இணைய நாகரிக மாநாடு 19ஆம் நாள் சீனாவின் குவாங்சி சுவான் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் நான்நிங்கில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சருமான லீ ஷுலெய் இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு முதல் இது வரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் அவர்களை மையமாக கொண்ட கட்சி மத்திய கமிட்டியின் உறுதியான தலைமையில், சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த இணைய மேலாண்மை கட்டமைப்பை சீனா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இணைய முன்னணி நாட்டின் கட்டுமானம் புதிய காலக்கட்டத்தில் நுழைந்துள்ளது என்று இம்மாநாட்டில் கலந்துகொண்டோர் கருத்துக்களைத் தெரிவித்தனர். இணைய நாகரிகத்தின் கட்டுமானத்தில் கூட்டாகப் பங்கெடுத்து பயனடையும் சீரான நிலைமையை உருவாக்கி, இணையதளம் மேலும் மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்றும் இதில் கலந்துகொண்ட விருந்தினர்கள் ஒருமனதாகக் கருத்துக்களை வெளியிட்டனர்.
