சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு..!

Estimated read time 1 min read

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கடந்த தி.மு.க ஆட்சி குறித்து பல விமர்சனங்களை வைத்தார். டாஸ்மாக்கில் கட்சி நிதி என்று அடித்த கொள்ளை ஒவ்வொன்றாக கஜானாவிற்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார். இந்நிலையில், முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு தி.மு.க உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். விஜய் பேசி முடித்ததும் உங்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்தார்.

மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொடமாட்டோம். தொடவும் விடமாட்டோம். இதற்கு முன் தொட்டவர்களையும் விடமாட்டோம். ஒவ்வொரு ஊழலா வெளிய வரும் போலயே. இங்கிருக்கும் நிறைய பேர் நடுங்கி போய். இதில் நம் மீது அவதூறு வேறு. இப்போது புதிதாக ஒரு வெப்பன் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் தயவால் தான் நம் ஆட்சி நடக்கிறதாம், மக்கள் தயவால் இந்த ஆட்சி நடக்கிறது என்றார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய், நாங்கள் கட்சிகளை அனுப்பி வைத்தோம் என்று தி.மு.க சொல்கிறது. அனுப்பி வைத்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் ஏன் கதறுகிறீர்கள். இடதுசாரிகள் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் எல்லாம் த.வெ.க-விற்கு ஆதரவு கொடுத்தது சுயட்சையாக எடுத்த முடிவு என்று கூறுகிறார்கள். மக்களுக்கு நன்றாக புரியும். எல்லாவற்றையும் தெளிவாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே தி.மு.க அவையை விட்டு வெளிநடப்பு செய்தது.

You May Also Like

More From Author