கனடாவின் தகவல் தொடர்பு பாதுகாப்பு அமைப்பு (சிஎஸ்இ), இந்தியா வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை கண்காணிக்க சைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
கனேடிய நெட்வொர்க்குகளுக்கு எதிரான இணைய நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்துவதாகவும் அதில் குற்றம் சாட்டியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகளைக் கண்காணிக்க இந்தியா சைபர் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளதாக அதன் அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக கனடாவின் மக்கள் தொகையில் கணிசமான அங்கம் வகிக்கும் சீக்கிய சமூகத்தில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைத்து இந்தியா செயல்படுவதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2023இல் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலையில் இந்தியத் தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதை அடுத்து பதட்டங்கள் அதிகரித்தன.