சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் 23ஆம் நாள் கூறுகையில், சீன-இந்திய எல்லை பகுதிகளின் ஒட்டுமொத்த நிலைமை நிலையாக இருப்பதோடு, எல்லை விவகாரத்துக்கான இருதரப்பின் தகவல் தொடர்பு வழிகள் தடையின்றி உள்ளது என்றார்.
சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான சிறப்பு பிரதிநிதிகளின் 24வது சந்திப்பில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்துக்களை இருதரப்பும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி வருகின்றன என்றும், அதே வேளையில் சிறப்பு பிரதிநிதிகளின் 25வது சந்திப்புக்கான ஆயத்தப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
