சட்டப்பேரவையில் விஜய் சொன்ன குட்டிக்கதை..!

Estimated read time 1 min read

முதலமைச்சர் சட்டப்பேரவையில் ஒரு குட்டிக்கதை சொன்னார். “ஒரு ஊரில் ஒரு பெரியவர் வெயில் அதிகமாக இருக்கிறது என நினைத்து கண்ணிற்கு மேலே கையை வைத்துக்கொண்டு சுற்றி சுற்றி தேடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பெரியவருடன் இருந்த ஒரு சிறுவன், என்ன தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்? என கேட்டார்.

அதற்கு அந்த பெரியவர், ஒன்றுமில்லை தம்பி. உங்களுடைய அப்பா இங்கேதான் இருப்பதாக சொன்னார்கள். அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் காணோம் என்றார். இதுபோன்று சம்பந்தமே இல்லாமல் என்னாலும் பேச முடியும்” என்று கதையை முடித்தார் முதலமைச்சர்.

தொடர்ந்து தேசிய கீதத்தை 2 முறை பாடி மரபை மீறிவிட்டதாக எதிர்க்கட்சியனர் கூறியது குறித்து பேசினார். அப்போது, “தேசிய கீதத்தை 2 முறை பாடியதை பெரிதாக எதிர்க்கட்சியினர் சித்தரித்தனர்.

2021 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற கலைஞருடைய புகைப்பட வெளியீட்டு விழாவில் குடியரசு தலைவர் கலந்துகொண்ட நிகழ்வில், தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது நினைவில் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், இதுபற்றி கேட்டால் அது குடியரசு தலைவர் கலந்துகொண்ட நிகழ்வு என்று கூறுவார்கள். அவர்கள் பேசுவது ஒன்று செய்வது ஒன்று என்று கூறினார்.

You May Also Like

More From Author