சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு கூட்டம் டிசம்பர் 25, 26ஆகிய நாட்களில் நடைபெற்றது.
புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் சிந்தனை இக்கூட்டத்தில் ஆழமாக கற்றுக்கொள்ளப்பட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வின் எழுச்சியைப் பன்முகங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சிந்தனை மற்றும் நடைமுறை பணிகளுக்கிணங்க, விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் மேற்கொள்ளப்பட்டது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார்.
