ஒபெக் ப்ளஸ் கூட்டமைப்பின் சில உறுப்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து ரஷியா தனது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை குறைக்கும்.
இந்நிலையில் அந்நாட்டின் தினசரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவு மொத்தமாக 4லட்சத்து 71ஆயிரம் பீப்பாய்கள் குறைக்கப்படும் என்று ரஷிய துணைத் தலைமை அமைச்சர் அலெக்சாண்டர் நோவாக் மார்ச் 3ஆம் நாள் தெரிவித்தார்.
அதே வேளையில், சவுதி அரேபியா 2023ஆம் ஆண்டின் ஜூலை முதல் தொடங்கிய தினசரி 10 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தி குறைப்புக்கான தன்னார்வ நடவடிக்கை, இந்த ஆண்டின் ஜூன் இறுதி வரை நீட்டிக்கப்படும் என்று சவுதி அரேபிய எரியாற்றல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த நடவடிக்கை நீட்டிக்கப்பட்ட பிறகு, சவுதி அரேபிய தினசரி எண்ணெய் உற்பத்தித் திறன் சுமார் 90 லட்சம் பீப்பாய்களை எட்டும். அதற்கு பிறகு இந்த கூடுதல் உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகள் சந்தை நிலைமையின்படி மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.