தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகினார். ஜூன் 5ம் தேதி அவரது விலகல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்றைய தினமே நண்பகலில் சமூக ஊடகங்கள் வாயிலாக நேரலையில் பேசிய அண்ணாமலை, இது நம்ம இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி இருப்பதாக அறிவித்தார்.
2029ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சியாக போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார். அண்ணாமலையின் அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திலேயே இது நம்ம இயக்கத்தில் மட்டும் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர். இன்றைய நிலவரப்படி (ஜூன் 24) இது நம்ம இயக்கத்தில் கிட்டத்தட்ட 18.54 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையை கண்ட செய்த நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.
தற்போதை தமிழக அரசியல் சூழல், சட்டசபை நிகழ்வுகள், முதல்வர் விஜயின் சட்டசபை பேச்சு, 40 நாட்கள் தவெக ஆட்சியின் நிலை பற்றி நிருபர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தனர்.அனைத்துக் கேள்விகளையும் இலகுவாக எதிர்கொண்ட அண்ணாமலை, நான் பேசுகிறேன். விரைவில் நம் எல்லோரும் உட்கார்ந்து பேசுவோம். அன்புக்கு நன்றி என்று கூறினார். பின்னர் அனைவரின் நலன்களையும் விசாரித்தபடி, புன்முறுவலுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
