இந்தியாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு-பெருந்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட வணிக நுகர்வோருக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து துறைசார் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு தற்பொழுது முழுமையாக நீக்கியுள்ளது.
இதன் மூலம், மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவி வந்த போர் நெருக்கடிக்கு முன்பாக எந்த அளவில் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டதோ, அதே அளவிற்குத் தற்பொழுது தடையற்ற விநியோகத்தை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.
வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: மத்திய அரசு உத்தரவு!
