7ஆவது சீன-ஆப்பிரிக்க செய்தி ஊடக ஒத்துழைப்புக் கருத்தரங்கு 20ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இதில், 7ஆவது சீன-ஆப்பிரிக்க செய்திஊடக ஒத்துழைப்பு கருத்தரங்குக்கான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. சீன-ஆப்பிரிக்க நட்பார்ந்த நட்புறவை இரு தரப்பும் நிலைநிறுத்தி வருகின்றன. 5ஆவது சீன-ஆப்பிரிக்க செய்தி ஊடக ஒத்துழைப்புக் கருத்தரங்கின் போது சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய கடிதத்தின் வழிகாட்டலின்படி, இரு தரப்புகளும் வானொலி, தொலைக்காட்சி, ஒளிப்பரப்பு உள்ளிட்ட துறைகளில் தொடர்பு மற்றும் ஒத்துழைப்புகளை தொடர்ந்து ஆழமாக்கும் என்று இக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சீனத் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பணியம், பெய்ஜிங் அரசு, ஆப்பிரிக்க வானொலி கூட்டணி ஆகியவை இக்கருத்தரங்கைக் கூட்டாக நடத்தின. சீனா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 45 நாடுகளின் சுமார் 400 பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். வரலாற்றிலேயே இல்லாத அளவில் ஆப்பிரிக்க நாடுகளின் 33 அமைச்சர் நிலைப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு நிகழ்வுக்குப் புதிய உச்சத்தை அளித்தனர்.
