பிரதமர் நரேந்திர மோடி சாதனை – மத்திய அமைச்சரவை பாராட்டு..!!

Estimated read time 1 min read

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது.

அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அனைத்து அமைச்சர்களும் ஒருமனதாக அவரது சாதனைகளைப் பாராட்டினர். பிரதமர் மோடி கூட்ட அரங்கிற்குள் நுழைந்தவுடன், அனைத்து அமைச்சர்களும் எழுந்து நின்று கைதட்டி அவரைப் பாராட்டினர். பிரதமர் மோடியின் 25 ஆண்டு கால பொதுச்சேவையை பாராட்டி மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளாக குஜராத் முதல்வராகவும், பிரதமராகவும் மோடி ஆற்றிய சாதனைகளுக்காக அந்தத் தீர்மானம் அவரைப் பாராட்டியது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த நிருபர்கள் சந்திப்பில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘கடந்த 25 ஆண்டுகளில் குஜராத்தின் முதல்வராகவும், பிரதமராகவும் மோடி ஆற்றிய சாதனைகளை மத்திய அமைச்சரவை பாராட்டியுள்ளது’ என்று கூறினார்.

மேலும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7% முதல் 8% வரை வளர்ந்து வரும் நிலையில், சரக்குக் போக்குவரத்துக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேவையைப் பூர்த்தி செய்ய, நாடு முழுவதும் ஏராளமான நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ரயில் போக்குவரத்து, புதிய நீர்வழிகள் மற்றும் துறைமுகங்கள் உருவாக்கப்படுகின்றன; புதிய விமான நிலையங்களும் கட்டப்படுகின்றன. எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அதாவது இன்னும் 10 ஆண்டுகளில் என்ன தேவைப்படும் என்பதை முன்னரே திட்டமிட வேண்டும். உதாரணமாக, எத்தனை புதிய ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் தேவைப்படும் என்பது போன்றவை.

கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் பல சீர்திருத்தங்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தியுள்ளார். சிறு, குறு நிறுவனங்கள் எளிதாகக் கடன் பெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author