வர்த்தக கவுன்சிலை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ள சீனா மற்றும் அமெரிக்கா

சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹெ யாடோங் 25ஆம் நாள் கூறுகையில், சீனா-அமெரிக்கா பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்தின்படி, இருதரப்பும் வர்த்தக கவுன்சிலை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளதோடு, இக்கவுன்சிலின் கீழ் சமமான சுங்கவரி குறைப்பு உள்ளிட்ட ஒத்துழைப்புகள் குறித்து விவாதிக்கும் என்றும், இருதரப்பின் பொருளாதார மற்றும் வர்த்தக குழுக்களும் இது தொடர்பாக மேலும் பேச்சுவார்த்தையை நடத்தும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விமானங்கள், விவசாயப் பொருட்கள் ஆகிய துறைகளில் சீனா-அமெரிக்கா வர்த்தக ஒத்துழைப்பு ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் என்றும், தொடர்புடைய துறைகளில் வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வகையில் இருதரப்பின் குழுக்களும் தொடர்பை நிலைநிறுத்தி, ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தத்தமது நிறுவனங்களை ஊக்குவித்து வழிகாட்டும் என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author