சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவருமான ஜாவ் லேஜி, 25ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் கம்போடிய மக்கள் கட்சியின் தலைவரும் செனட் சபையின் தலைவருமான ஹுன் செனுடன் சந்திப்பு நடத்தினார்.
ஜாவ் லேஜி கூறுகையில், இருகட்சிகள் மற்றும் இருநாடுகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முக்கிய ஒருமித்த கருத்துக்களை வழிகாட்டலாக கொண்டு, பாரம்பரிய நட்பைத் தொடரவும், உத்திநோக்கு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சியைக் கூட்டாக நனவாக்கவும் கம்போடியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
