9ஆவது சீனா-யுரேசியா கண்காட்சி ஜூன் 25ஆம் நாள் சின்ஜியாங்கின் உருமுச்சி நகரில் துவங்கியது. சீநக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீன அரசவையின் துணை தலைமை அமைச்சருமான டிங் சுயேசியாங் இக்கண்காட்சியின் துவக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
பண்டைகாலத்திலிருந்து நாகரிங்களும் வர்த்தகத் தொடர்பும் பின்னிப்பிணைந்து வரும் யுரேசிய கண்டம், தற்போது ஒரு பண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கீழ் சர்வதேச ஒத்துழைப்புக்கான முக்கிய பகுதியாகும். கடந்த சில ஆண்டுகளாக சீனா யுரேசியாவின் அனைத்து தரப்புகளுடனும் இணைந்து பல்வேறு துறைகளிலான நடைமுறை ஒத்துழைப்புகளை மேம்படுத்தி வருவதால், பழமை வாய்ந்த பட்டுப்பாதை புத்துயிர் பெற்றுள்ளது என்று டிங் சுயேசியாங் சுட்டிக்காட்டினார்.
மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலும் தேசிய மக்களின் ஆதரவுடனும் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் அனைத்து லட்சியங்களும் வரலாற்று சாதனைகளைப் பெற்றுள்ளன. உள்ளூர் நிலைமைக்கிணங்க உயர்தர வளர்ச்சிப் பாதையை ஆராய்வதில் சின்ஜியாங்கிற்கு முன்பை போல ஆதரவு அளிப்பதோடு, பட்டுப்பாதை பொருளாதார மண்டலத்தின் மையப் பகுதிக்கான அதன் ஆக்கப்பணியையும் விரைவுபடுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
கசகஸ்தான் துணை தலைமை அமைச்சர், கிர்கிஸ்தான் துணை தலைமை அமைச்சர், பாகிஸ்தான் தேசிய பேரவையின் துணைத் தலைவர் ஆகியோர் இத்துவக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
ஜூன் 24, 25 ஆகிய நாட்களில் டிங் சுயேசியாங் அவர்களுடன் தனித்தனியாக சந்திப்பு நடத்தி, பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
