உலகத்துக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் சீனப் புத்தாக்கம்

Estimated read time 1 min read

சீனாவின் டாலியன் நகரில் ஜூன் 23 முதல் 25ஆம் நாள் வரை, உலகளவில் சுமார் 90 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1700க்கும் மேலான விருந்தினர்கள் ஒன்றுகூடி, 2026ஆம் ஆண்டு கோடைக்கால டாவோஸ் மன்றக்கூட்டத்தில் பங்கெடுத்தனர்.

“பெரிய அளவிலான புத்தாக்கம்” என்ற தலைப்பிலான நடப்பு மன்றக்கூட்டத்தின்போது, செயற்கை நுண்ணறிவு, புதிய எரியாற்றல், உயிரி மருத்துவம் மற்றும் மருந்து, குவாண்டம் அறிவியல் தொழில் நுட்பம் உள்ளிட்ட முன்னேறியத் துறைகளுடன் தொடர்புடைய நூற்றுக்கும் மேலான நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

மேலதிக புத்தாக்க ஆற்றல் கொண்ட “சீனாவின் வாய்ப்புகள் 2.0” என்பதைச் சீனா உலகத்தோடு பகிர்ந்து கொண்டு வருவதை நடப்பு மன்றக்கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது.

முழுமையான தொழில் துறை அமைப்புமுறை, மிகப் பெரிய அளவிலான சந்தை, சுறுசுறுப்பாகியுள்ள புத்தாக்க நிலைமை முதலியவை, சீனா பெரிய அளவிலான புத்தாக்கத்தை முன்னேற்றுவதற்கான தன்னம்பிக்கையாகும். 2025ஆம் ஆண்டு உலகப் புத்தாக்க குறியீட்டு அறிக்கையின்படி, சீனா முதன்முறையாக முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது. உலகளாவிய சிறந்த 100 புத்தாக்கக் குழுக்களில், சீனக் குழுக்களின் எண்ணிக்கை 3 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக, மேலதிக நாடு கடந்த நிறுவனங்கள் சீனாவில் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையங்களை அமைத்துள்ளன. இதன் மூலம், “சீனாவில் உற்பத்தி” என்பது “சீனாவில் புத்தாக்கம்” என்பதாக மாறியுள்ளது.

இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில், சுமார் 4000 அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீட்டை அதிகரித்துள்ளன. சீனச் சந்தை மற்றும் புத்தாக்க நிலைமையின் ஈர்ப்பு ஆற்றலை இது காட்டியுள்ளது.

சீனப் புத்தாக்கம், உலகத்துக்கு பாதிப்பை அல்ல, வாய்ப்புகளையே வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உண்மைகள் நிரூபித்துள்ளன.  

 

You May Also Like

More From Author