சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 7ஆம் நாள் தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சாவ் சியனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
சீனாவும் தென்கொரியாவும் முக்கிய அண்டை நாடுகளாகவும் நெருக்கமான ஒத்துழைப்பு கூட்டாளியாகவும் திகழ்கின்றன. இரு நாட்டுறவில் சீனா கவனம் செலுத்தி வருகின்றது. தென்கொரியாவுடன் இணைந்து, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை வலுப்படுத்தி, தலையீடுகளைத் தவிர்த்து, ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, ஒன்றுக்கு ஒன்று துணை புரிந்து, பிரதேச அமைதிக்கும் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் பங்காற்ற வேண்டும் என்று சீனா விரும்புகின்றது என்று வாங் யீ தெரிவித்தார்.
இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டில், சீனாவும் தென்கொரியாவும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் அதிகப்பூர்வமற்ற கூட்டத்தை முறையே நடத்தவுள்ளன. இருதரப்பும், ஒன்றுக்கு ஒன்று ஆதரவு அளித்து, பல்வேறு தரப்புகளின் ஒத்த கருத்துகளை சேகரித்து, ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, சர்வதேச வர்த்தக அமைப்பு முறையை பேணிக்காத்து, பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று, ஆசிய பசிபிக் பொது சமூகத்தை கட்டியமைப்பதற்குப் பாடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
