மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் – முதல்கட்ட சோதனை வெற்றி!

Estimated read time 0 min read

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக, முதல்கட்ட தரைச் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

ககன்யான் திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய திட எரிபொருள் மோட்டாரின் முதல்கட்ட தரைச் சோதனையை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இந்தச் சோதனையில் அனைத்து செயல்திறன் அளவுகோள்களும் எதிர்பார்த்தபடி செயல்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்கலத்தில் பயணிக்கும் வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதி செய்யும் பாராசூட் அமைப்பின் ஒருங்கிணைந்த சோதனைகளுக்கு இந்த மோட்டார் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த வெற்றி, இந்தியாவின் முதல் மனிதர் விண்வெளிப் பயணத் திட்டத்தில் மற்றொரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

You May Also Like

More From Author