உலக சுகாதார மாநாட்டில் பங்கேற்ற சீனப் பிரதிநிதிக் குழு 17ஆம் நாள் ஜெனீவாவில் செய்தியாளர்களைச் சந்தித்தது.
இந்த சந்திப்பின்போது, இக்குழுவின் தலைவரும் சீனத் தேசிய சுகாதார மற்றும் ஆரோக்கிய ஆணையத்தின் இயக்குநருமான லெய்ஹெய்ச்சோ கூறுகையில், சீன பாணி நவீனமயமாக்கலின் முன்னேற்றப் போக்கை விரைவுபடுத்துவதோடு ஆரோக்கியமான சீனா உருவாக்குவதில் ஆக்கப்பூர்வமான முறையில் பாடுபட்டு வருகிறோம்.
சுகாதார மற்றும் ஆரோக்கியத்தின் லட்சியத்தில் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சீர்திருத்த வளர்ச்சிப் பாதையை உருவாக்க முயன்று வருகிறோம். மேலும், உலக சுகாதார மேலாண்மையில் சீனா ஆழமாகப் பங்கேற்றியுள்ளது.
மனிதகுலத்தின் சுகாதார மற்றும் ஆரோக்கிய பொது சமூகத்தைக் கட்டியமைக்க, தனது விவேகம் மற்றும் சக்திப்பின் மூலம் சீனா பங்காற்றியுள்ளது என்றார்.