8வது சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகக் கலந்தாய்வில் ஒத்த கருத்துக்கள்

சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக பிரதிநிதி குழுக்கள், நியூயார்கில் நடத்திய 8வது சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகக் கலந்தாய்வு கூட்டம் குறித்து, சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 24ம் நாள் விளக்கிக் கூறினார்.

அவர் கூறுகையில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துக்களின் தலைமையில், இரு தரப்பினரும், ஏற்கெனவே உள்ள பொருளாதார வர்த்தக ஒத்த கருத்துக்களின் நடைமுறையாக்கம், பரஸ்பர சுங்க வரி குறைப்பு, வர்த்தக மற்றும் முதலீட்டு கவுன்சில் உருவாக்கம், கோலாலம்பூர் பொருளாதார வர்த்தகக் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளின் நீட்டிப்பு முதலிய பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து திறந்த மனத்துடன், ஆழமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, பல ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளனர் என்றும் சீனத் துணை தலைமை அமைச்சர் ஹே லீஃபாங், அமெரிக்க நிதி அமைச்சர் பெசன்ட் ஆகியோர், சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகக் கலந்தாய்வு அமைப்பு முறையின் கீழ் செயற்கை நுண்ணறிவு குறித்து முதல் பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும் விளக்கினார்.

You May Also Like

More From Author