சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து எனும் புத்தகம் உலக தெற்கு நாடுகளின் கவனத்திற்குப் பதிலளிக்கிறது: இலங்கை

சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து எனும் புத்தகத்தின் 5ஆவது தொகுதி தொடர்பான சீன-இலங்கை வாசகர்கள் மன்றக் கூட்டம் ஜூலை 3ஆம் நாள் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இலங்கையின் “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை” அமைப்பின் இணை நிறுவனர் மாயா மாகுவேரன் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, இப்புத்தகத்தின் 5ஆவது தொகுதியில், கூட்டு வளர்ச்சி, பொது பாதுகாப்பு, நாகரிக பரஸ்பர கற்றல், பலதரப்பு ஒத்துழைப்பு ஆகியவை பற்றிய கருத்துகள், உலகளாவிய தெற்கு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உலகளாவிய தெற்கு நாடுகள் வளர்ந்து வருகிறது. இந்த நாடுகள் பங்களிப்பாளர்களாக மட்டுமல்லாமல், 21ஆவது நூற்றாண்டு சர்வதேச ஒழுங்கு தொடர்புடைய விதிகள், அமைப்பு முறைகள் மற்றும் கருத்துகளை வழங்கும் முக்கிய பங்காறுபவர்களும் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author