வெனிசூலாவுக்கான சீனாவின் முதலாவது தொகுதி மனிதநேய உதவிப் பொருட்கள் அனுப்புதல்

வெனிசூலாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின், சீன அரசு அந்நாட்டிற்கு விரைவில் நிதியுதவியை வழங்கியது. இதையடுத்து, வெனிசூலாவுக்கு சீனாவின் முதலாவது தொகுதி மனித நேய உதவிப் பொருட்கள் ஜூலை 5ஆம் நாளிரவு பெய்ஜிங் தலைநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளன.

80 டன்னுக்கும் அதிகமான இந்த முதலாவது தொகுதி உதவிப் பொருட்களில் மின்னாக்கிகள், நீர் சுத்திகரிப்பு வாகனங்கள், சூரிய ஆற்றல் மூலமான ஒளி உபகரணங்கள், கூடாரங்கள் முதலியவை அடங்கியுள்ளன.

You May Also Like

More From Author