சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 16ஆம் நாள்பெய்ஜிங்கில் ஸ்வீடன் வெளியுறவு அமைச்சர் ஸ்டெனர்கார்டைச் சந்தித்துரையாடினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், இவ்வாண்டு
சீன-ஸ்வீடன் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். ஸ்வீடனுடன் இணைந்து
இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்தக் கருத்துக்களை உணர்ச்சிப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி
இரு நாட்டுறவின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்னேற்றச் சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.
அதே நாள், அமெரிக்க
பிளாக்ஸ்டோன் குழுமத்தின் தலைமை இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுவார்ட்ஸ்மேனையும் வாங்யீ சந்தித்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, சமத்துவம், மதிப்பு
மற்றும் ஒன்றுக்கொன்று நன்மை தருதல் ஆகியவை சீனா அமெரிக்கா ஆகிய இருபெரும் நாடுகள்
ஒன்றையொன்று அணுகுவதற்கான சிறந்த வழிமுறையாகும் என்று வாங்யீ கூறினார். இரு
தரப்பும் பயனுள்ள தொடர்பை மேற்கொண்டு, கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் தீர்த்து
இரு நாட்டுறவின் நிலையான சுமுகமான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும்
என்று வாங்யீ தெரிவித்தார்.
இதற்கு முயற்சி செய்ய விரும்புவதாக சுவார்ட்ஸ்மேன்
கூறினார்.