சீன சர்வதேச விநியோக சங்கிலி கண்காட்சி பற்றிய கருத்துக் கணிப்பு

சீன சர்வதேச விநியோக சங்கிலி கண்காட்சி குறித்து, சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் உலகெங்கிலும் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், திறந்த உலக பொருளாதாரத்தை உருவாக்குவதில் சீனாவின் பங்களிப்புகளை 79.5 விழுக்காட்டினர் நேர்மறையாக மதிப்பிட்டு, உலகளாவிய தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளின் உறுதியான பாதுகாவலராகவும் கட்டியமைப்பாளராகவும் சீனாவை கருதுகின்றனர். உலகளாவிய ஏஐ தொழில்நுட்பம் தொழில்துறைச் சங்கிலியுடன் ஒருங்கிணைப்பதற்கு ஒரு முக்கியமான சர்வதேச பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு தளத்தை இக்கண்காட்சி உருவாக்கியுள்ளது என்று 66.8 விழுக்காட்டினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். உலகளாவிய தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளின் நிலைத்தன்மையையும் தடையற்ற இயக்கத்தையும் பராமரிப்பதற்கும், சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் இக்கண்காட்சி மதிப்புமிக்க தளத்தை வழங்கியுள்ளது என்று 82 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author