“எம்ஜிஆர் போன்று காலத்தின் கட்டாயம் விஜய்” – வைகைச்செல்வன்

Estimated read time 0 min read

சென்னை பனையூரில் நடைபெற்ற மாற்றுக் கட்சி இணைவு விழாவில் தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்.

முதலமைச்சர் விஜயை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகை செல்வன், “அதிமுகவில் சரியான தலைமை இல்லாததால் தவெகவில் இணைந்தோம். தோல்வி அடைந்த ஒரு தலைவர் மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்துக்கொண்டே இருந்தால் எப்படி தொண்டர்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை வரும், தலைமை பண்பை இ.பி.எஸ் இழந்து விட்டார். இப்படியே சென்றால் அ.தி.மு.கவின் நிலைமை தான் என்ன?

முதல்வர் விஜய் கனிவுடன் இனிமையாக பேசினார்.. எளிமையான மனிதர்.. இப்படிப்பட்டவர் தான் தமிழ்நாட்டுக்கு தேவை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் காலத்தின் கட்டாயத்தால் ஒரு இளம் தலைவர் விஜய் வந்திருக்கிறார். தமிழ்நாட்டின் தகுதியுள்ள தலைவராக விஜய் உயர்ந்திருப்பதால், அவரை தேடி வந்து இணைந்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக விஜய் உருவெடுத்திருக்கிறார்” என்றார்.

You May Also Like

More From Author