“நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அமெரிக்காவைத் தொட எந்த நாட்டுக்கும் தைரியம் வராது, ஒருவேளை ஈரான் என்னைக் கொலை செய்ய சதி செஞ்சு அதுல ஜெயிச்சுட்டா.. அப்புறம் அங்க நடக்கப்போற பேரழிவை இந்த உலகமே இதுக்கு முன்னாடி பார்த்திருக்காது, அவங்க மொத்த நாடும் சுடுகாடா மாறிடும்!”
என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியூயார்க் போஸ்ட் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ஈரானுக்கு ஓப்பனாகவே மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் உளவுத்துறை டிரம்ப்பின் உயிருக்கு ஈரானால் ஆபத்து இருப்பதாக எச்சரித்ததைத் தொடர்ந்து, தான் நீண்ட நாட்களாக ஈரானின் ஹிட் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பதை டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்; கடந்த 2020-ல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதில் இருந்தே ஈரான் பழிவாங்கத் துடிப்பதை சுட்டிக்காட்டிய அவர், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் ஈரானின் அணு ஆயுதக் கனவை சுக்குநூறாக்கி, அந்த நாட்டின் மீது வரலாற்றின் மிக மோசமான வான்வழித் தாக்குதலை நடத்த ஏற்கனவே அமெரிக்க ராணுவத்திற்கு ரகசிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
தற்போது இருநாடுகளுக்கும் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ள டிரம்ப், ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்குக் கெஞ்சுவதாகவும், ஆனால் அவர்கள் அணு ஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் மிகக் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளார்.
