கடந்த 1985 ஆம் ஆண்டு 329 பயணிகளின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா கனிஷ்கா பயணிகள் விமான குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு, கனடாவில் இருந்து இயங்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளே முழு முதற்காரணம் என்று கனடா நாட்டின் உளவுத்துறை 40 ஆண்டுகளில் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த வெளிப்படையான ஒப்புதல் சர்வதேச அளவிலும், குறிப்பாக இந்தியா – கனடா இருதரப்பு உத்திசார் உறவுகளிலும் ஒரு மிக முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
329 பேர் பலியான கொடூரம்! 40 ஆண்டுகளுக்கு பின் ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் காலிஸ்தான் தொடர்பை ஒப்புக்கொண்டது கனடா
