தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவது இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்ல சுப நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வைத்திருக்கும் குடும்ப தலைவர்களுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை எப்போது இறங்கும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,900-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.95200-க்கும் lவிற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் குறைந்து, ஒரு கிராம் ரூ.206-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.