நான் மட்டும் தலையிடாவிட்டால் பாகிஸ்தான் பிரதமர் கொல்லப்பட்டிருப்பார்!: ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ட்ரம்ப்  

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் “ஸ்டேட் ஆஃப் தி யூனியன்” உரையை ஆற்றிய டொனால்ட் ட்ரம்ப், கடந்த 10 மாதங்களில் தான் 8 சர்வதேச போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதில் குறிப்பாக, கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த அவரது கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
இந்தியாவின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கொல்லப்படுவதிலிருந்து தான்தான் காப்பாற்றியதாக ட்ரம்ப் முதன்முறையாக தெரிவித்துள்ளார்.
“என்னுடைய ஈடுபாடு மட்டும் இல்லையென்றால் பாகிஸ்தான் பிரதமர் இறந்திருப்பார் என்று 35 மில்லியன் மக்கள் கூறினர்” என்று ட்ரம்ப் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author