தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபல இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, குறைந்தது 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விராகுல் தெரிவித்துள்ளார்.
பாங்காக்கில் அமைந்துள்ள ‘ராங் பீர் நா லாட் பிராவ்’ என்ற பிரபல கேளிக்கை விடுதியில், நள்ளிரவு 11:30 மணி அளவில் வாடிக்கையாளர்கள் பலர் திரண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மெயின் சுவிட்ச் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து, அது கண் இமைக்கும் நேரத்தில் கட்டிடம் முழுவதும் பரவியதாக அங்கு இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாங்காக் பாரில் பயங்கர தீ விபத்து: மின் கசிவால் 27 பேர் பரிதாப பலி
